Wednesday, August 27, 2008

அறிமுகம்

வணக்கம். என் பேரு விஜய முருகன் ரங்கசாமி... சுருக்கமா, கொஞ்சம் பேருக்கு விஜய், ரொம்ப கொஞ்சம் பேருக்கு விஜி. சொந்த ஊரு கோயம்புத்தூர். புகுந்த ஊரு நியூ யார்க். பிடிச்ச ஊரு ரெண்டும் தான். சொந்த ஊர் காரணம் அப்பா, அம்மா. புகுந்த ஊர் காரணம், தொழில். கணிபொறி பேசும் மொழி படிச்சு, மின் வீதி வழிய அமெரிக்கா வந்தாச்சு. வந்தபோது வயசு 24. இப்போ முப்பத்தி ஒன்னு. எட்டு வருஷத்துல நெறைய மாறிடுச்சு. வெயில், புழுதி, வேர்வை எல்லாம் இப்போ AC, ஹிஇட்டார், சன் கிளாஸ்-நு ஆயாச்சு. ஜாதி, மத வேறுபாடுகள் கூட இப்போ இன , நிற, மொழி வேறுபாடுகள் சேர்ந்தாச்சு. சல்வார், சுரிதார் பெண்கள் போயீ இப்போ குறைந்த ஆடையுள் நிறைந்து வலியுற லேடீஸ். பைக் போயீ கார், 5000 போயீ கொரோனா. இவளவு மாற்றதில லேட்டஸ்ட் பெரிய மாற்றம் கல்யாணம். வீட்டுல பார்த்து தான். மகாலக்ஷ்மியவே கட்டி வைசுடாங்க. இந்த பெரிய மாற்றதில, நெறைய சின்ன மாற்றம். பொறுப்பு வந்துட மாதிரி, ரொம்ப தூரம் கடந்து வந்துட மாதிரி, உள்ளார கொஞ்சம் மென்மைஆயிட மாதிரி. நாலு மாசம் தான் ஆச்சு, அதனால எல்லாம் மாதிரி தான்.இந்த பல மாதிரில இப்போ பழைய மாதிரி மீண்டும் எழுதற பழக்கம். கதை, கவிதை, கட்டுரைன்னு எழுத எண்ணம். நடக்குதானு பார்க்கணும்.
என்னை பத்தி இன்னும் நெறைய சொல்லுவேன். ஆனா நீங்கா அவஷியமானு கேப்பீங்க. நான் அடுத்து அடுத்து எழுதும் போது நெறைய நீங்களே தெரிஞ்சுபீங்க. அது வரைக்கும் , நன்றி.